Categories
சென்னை மாநில செய்திகள்

வீட்டிற்கே சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டம்…. ஒரே நாளில் 500 முதியோர்களுக்கு தடுப்பூசி…. சென்னை மாநகராட்சி….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி பகுதிகளில் வசிக்கும் 80 வயதுக்கு மேற்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி 044 25384520, 4612 2300 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு பதிவு செய்வோருக்கு அவர்களின் வீடுகளுக்குச் சென்று தடுப்பூசி செலுத்தப்படும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.

இந்தத் திட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது. முதல் நாளே 80 வயதுக்கு மேற்பட்ட 463 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 37 பேருக்கு இரண்டாம் தவணைத் தடுப்பூசியும் என மொத்தம் 500 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதற்காக மொத்தம் 15 வாகனங்களில், ஒவ்வொரு வாகனத்திற்கும் செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று மாநகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Categories

Tech |