உலகம் முழுவதும் பரவிய கொரோனா பெருந்தொற்றின் காரணமாக பல்வேறு நிறுவனங்களின் ஊழியர்கள் வீட்டிலிருந்தபடியே வேலை செய்து வந்தனர். இந்த தொற்றானது தற்போது படிப்படியாக குறைந்து வருவதால் மீண்டும் ஊழியர்கள் அலுவலகத்திற்கு வந்து வேலை செய்யும்படி அறிவுறுத்தப்படுகின்றனர். ஆனால் பெரும்பாலான ஊழியர்கள் வீட்டிலிருந்தபடியே வேலை செய்ய விரும்புகின்றனர். இப்படி வீட்டில் இருந்து வேலை செய்வது ஊழியர்களுக்கு மட்டும் அல்லாது, நிறுவனங்களுக்கும் நன்மை அளிப்பதால் வீட்டில் இருந்து வேலை செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று தகவல் அளித்துள்ளது. அந்த தகவலின்படி நகர்ப்புற மையங்களில் வசதியான பணியிடங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. இந்நிலையில் ரியல் எஸ்டேட், நில உரிமையாளர்கள் மற்றும் டெவலப்பர்கள் தங்களுடைய எதிர்கால வேலைக்கான சுற்றுச்சூழலை அமைத்துக் கொள்வதற்கான வழிமுறைகளை செய்து வருகின்றனர். இதனையடுத்து தொலைதூரத்தில் இருந்து வேலை செய்வதன் மூலமாக நில ஆக்கிரமிப்புகளை தடுக்க முடியும். இதற்கு ரியல் எஸ்டேட் மற்றும் உள்கட்டமைப்பு வேலைகளில் சாத்தியம் இருப்பதாக கூறப்படுகிறது.
அதாவது வீட்டில் இருந்து வேலை செய்யும் முறையானது ஏற்றுகொள்ளும் படியாகவே இருக்கிறது. இருப்பினும் வீட்டில் இருந்து வேலை செய்வதில் பிரச்சினைகளும் இருக்கிறது. அது என்னவென்றால் ஊழியர்களுக்கு சோர்வு, மனநலப் பிரச்சினை, தனிமை, நிறுவன அமைப்பு, குழுவை உருவாக்கும் நடவடிக்கைகள், ஒத்துழைப்பு, தொடர்பு போன்ற பிரச்சினைகள் வீட்டில் இருந்து வேலை செய்வதால் ஏற்படும். மேலும் பணியிடத்திற்கும், நேரத்திற்கும் இடையே சமமான காலநிலையை ஏற்படுத்துவதோடு முதலாளிகளுக்கும், தொழிலாளிகளுக்கும் இடையே உள்ள ஒரு உறவை அலுவலகத்திற்கு சென்று வேலை பார்ப்பதன் மூலமாகத்தான் பெற முடியும்.