இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் என்பது மிக முக்கியமான ஆவண சான்றாகும். மாநில மற்றும் மத்திய அரசு வழங்கும் சலுகைகளை பெறுவதற்கு ஆதார் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. ஆதார் கார்டில் விவரங்கள் சரியாக இருக்க வேண்டும். ஏதேனும் தவறுகள் இருந்தால் உடனடியாக அப்டேட் செய்ய வேண்டும். உங்கள் ஆதார் எண், பிறந்த தேதி மற்றும் பெயர், தொலைபேசி எண் போன்ற விவரங்களை எளிதாக மாற்றிவிடலாம்.
அவற்றை வீட்டிலிருந்தபடியே அப்டேட் செய்ய முடியும். புகைப்படம், செல்போன் நம்பர் ஆகியவற்றை அப்டட் செய்ய இ-சேவை மையத்திற்கு தான் செல்ல வேண்டும். ஆதார் அட்டையில் உள்ள பிறந்த தேதியை ஒரு முறைக்கு மேல் அப்டேட் செய்ய முடியாது. அதே போல ஒருவரின் பெயரை இரண்டு முறை மட்டுமே மாற்ற முடியும். இப்பொழுது வீட்டில் இருந்தபடி ஆன்லைன் மூலமாக பிறந்த தேதியை எப்படி மாற்றுவது என்பது குறித்து பார்க்கலாம்.
இதற்கு முதலில் ஆதார் அமைப்பின் https://ssup.uidai.gov.in/ssup/. என்ற வெப்சைட்டில் செல்ல வேண்டும். அடுத்ததாக “Proceed to Update Aadhar” கொடுக்க வேண்டும். பின் உங்களுடைய 12 இலக்க ஆதார் எண்ணைப் பதிவிட வேண்டும். கேப்ட்சா குறியீட்டைப் பதிவிட வேண்டும். மொபைல் நம்பருக்கு வரும் ஓடிபி நம்பரை பதிவிட வேண்டும்.
அடுத்ததாக, ‘Update Demographics Data’ என்பதை கிளிக் செய்ய வேண்டும். மீண்டும் ஓடிபி சரிபார்ப்பு செய்யப்படும். பிறந்த தேதியை அப்டேட் செய்தவுடன் அதற்கான ஆவணத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்.