Categories
மாநில செய்திகள்

வீட்டிலிருந்து பணிபுரியும் அரசு ஊழியர்கள்…. வெளிமாவட்டம் செல்ல தடை… அதிரடி உத்தரவு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்து வருகிறது. நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த உண்மை நிலவரம் உறைய வைக்கிறது. இந்நிலையில் தலைநகர் டெல்லியிலேயே ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இதனால் கொரோனாவால் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் தமிழகத்திலும் கொரோனா அதிகரித்து வருவதால் இரவு ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் பல புதிய கட்டுப்பாடுகளும் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மேலும் சில கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து இன்று முதல் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றது. இந்நிலையில் வீட்டிலிருந்து பணிபுரியும் அரசு ஊழி யர்கள் தேவையில்லாமல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லக் கூடாது என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா காரணங்களால் 50 சதவீத அரசு ஊழியர்கள் சுழற்சி முறையில் வேலை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நிலையில் அதற்கான கட்டுப்பாடுகள் வெளியிடப்பட்டுள்ளது.

Categories

Tech |