Categories
மாநில செய்திகள்

வீட்டிலிருந்து வந்த துர்நாற்றம்… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர்…. வீட்டில் சடலமாக கிடந்த அதிர்ச்சி சம்பவம்…!!!!

உதகையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் வீட்டில் சடலமாக கிடந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உதகை அருகே புதுமந்து பகுதியை சேர்ந்த சந்திரன் என்பவரின் மனைவி கீதா. இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இவர்கள் காய்கறி தோட்டத்தை ஒப்பந்த முறையில் எடுத்து விவசாயம் செய்து வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களாக இவர்கள் யாரும் வீட்டை விட்டு வெளியில் வராமல் இருந்துள்ளனர். இரவு வரை யாரும் வீட்டை விட்டு வெளியில் வராததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் அவரது வீட்டின் அருகே சென்ற போது துர்நாற்றம் வீசியது. பின்னர் ஜன்னல் வழியே எட்டி பார்த்தபோது அவர்கள் சடலமாக தூக்கில் தொங்கி இருந்தன.

மேலும் அவரது குழந்தைகள் இருவரும் தரையில் சடலமாக கிடந்தனர். இதையடுத்து அப்பகுதி மக்கள் அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தன.ர் இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் அவர்களது உறவினர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |