Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

வீட்டிலிருந்து வந்த துர்நாற்றம்…. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

நீதிமன்ற ஊழியர் இறந்து கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள முத்துலட்சுமி நகரில் செந்தில்குமார்(46) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் குன்னம் நீதிமன்றத்தில் அமீனாவாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஜெயசித்ரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஹரிப்பிரியா என்ற பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஜெயசித்ரா தனது மகளுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். நேற்று முன்தினம் ஜெயசித்ரா தனது வீட்டிற்கு சென்று பார்த்த போது துர்நாற்றம் வீசியது.

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அளவுக்கு அதிகமான மது குடித்து செந்தில்குமார் இறந்து கிடந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் செந்தில்குமாரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |