தொழிலாளி அழுகிய நிலையில் சடலமாக கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பழைய பேட்டை கண்டியபேரி பகுதியில் கூலி தொழிலாளியான சொர்ணம்(52) என்பவர் வசித்து வருகிறார். இவரது முதல் மனைவி இறந்துவிட்டார். இதனால் குளோரி என்ற பெண்ணை சொரணம் 2-வதாக திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு குளோரி தனது தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் சொர்ணம் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
நேற்று முன்தினம் பூட்டப்பட்ட வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று பார்த்தபோது அழுகிய நிலையில் சொர்ணம் சடலமாக கிடந்துள்ளார். இதனை எடுத்து தொழிலாளியின் உடலை கைப்பற்றி நிலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சொர்ணம் எப்படி இறந்தார் என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.