Categories
தேசிய செய்திகள்

வீட்டிலிருந்து வேலை…. ஆனா பெண்களுக்கு 3 வித சுமைகள்…. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்….!!!!!

வொர்க் ஃப்ரம் ஹோம் பல்வேறு நன்மைகளை கொண்டிருந்தாலும் பெண்களை பொறுத்தவரையிலும் அவர்களுக்கு இது அதிக சுமைதான் என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். மனோரமா இயர்புக் 2022-ஆம் ஆண்டிற்கான அவரது கடிதத்தில், ஏற்கனவே பெண்கள் ஊதியம் பெறும் வேலை, வீட்டுப் பொறுப்பு இரண்டையும் செய்ய வேண்டும்.

தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருப்பதால் குழந்தைகள் இணையவழியில் படித்து வருகின்றனர். இவ்வாறு குழந்தைகளும் இணையவழியில் படிப்பதால் அந்த சுமையும் பெண்களையே சேர்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். இதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கேட்டுள்ளார்.

Categories

Tech |