Categories
தேசிய செய்திகள்

வீட்டிலிருந்தே வேலை செய்ய விரும்பும் பெண்களுக்கு…. ஆக்சிஸ் வங்கி வழங்கும்…. ஓர் அரிய வாய்ப்பு…!!!!

வீட்டில் இருந்து வேலை பார்க்கும் பெண்களுக்காக சிறப்பு திட்டத்தை ஆக்சிஸ் பேங்க் அறிவித்துள்ளது. 

அனைத்து துறைகளிலுமே ஆண்களுக்கு இணையாக பெண்களும் உயர் பதவிகளில் வந்துவிட்டனர். குடும்பத்தை பார்த்துக் கொள்வது மட்டும் இல்லாமல் வேலையிலும் சாதித்து  காட்டுகிறார்கள். குடும்பப் பொறுப்புகள் அதிகமாக இருப்பதனால் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப வேலைக்கு செல்ல முடியாமல் அவர்களின் கனவுகள் கலைந்து விடுகிறது. இது போன்ற பெண்களுக்கு உதவும் வகையில் அவர்களை ஊக்கப்படுத்தவும் சிறப்பு திட்டத்தை தனியார் வங்கி ஆக்சிஸ் பேங்க் கொண்டு வந்தது.

‘House Work is Work’ என்ற இடத்தில் வேலையை விட்டு ஹோம் மேக்கராக   வீட்டில் இருக்கும் பெண்களுக்கு வேலை கிடைக்கும் அவர்களின் திறமைக்கேற்ப சம்பளம் கிடைக்கிறது. பெண்கள் சுயமாக வாழ்வதை இத்திட்டம் ஊக்குவிக்கிறது. மேலும் வீட்டிலேயே இருந்து வேலை பார்க்கும் பெண்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும். இத் திட்டத்தில் இணைவதற்கு பெண்கள் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

மேலும் அவர்களின்  திறமைக்கேற்ப சம்பளம் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. அதாவது ஆக்சிஸ் பேங்க் ஊழியர்களுக்கு  வழங்கப்படும் சம்பளத்தின் அளவு இவர்களுக்கும் வழங்கப்படும் என அவ்வங்கியின் தலைவர்  கூறியுள்ளார். மேலும் கம்யூனிகேஷன் ஸ்கில், டீம் வொர்க் போன்ற அம்சங்கள் இருக்க வேண்டும். மொபைல் போன் வைத்திருக்க வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 3,000க்கும்  மேற்பட்ட பெண்கள் விண்ணப்பித்துள்ளதாக ஆக்சிஸ் பேங்க் அறிவித்துள்ளது.

Categories

Tech |