Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வீட்டிலும் விற்பனை நடக்குது…. போலீசார் அதிரடி சோதனை…. 390 பாட்டில்கள் பறிமுதல்….!!

சட்ட விரோதமாக வீட்டில் பதுக்கி வைத்து மது விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியை அடுத்துள்ள பவித்திரம் புதூரில் ரமேஷ்(44) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் சந்துக்கடை பகுதியில் வைத்து சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் எருமப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் பூபதி தலைமையில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது ரமேஷ் என்பவற்றின் வீட்டை சோதனை செய்ததில் சுமார் 390 மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்த போலீசார் ரமேஷையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |