Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

வீட்டிலேயே உறை இல்லாமல் தயிர் செய்யலாம்… எப்படி தெரியுமா..? வாங்க பாக்கலாம்..!!

வீட்டிலேயே உறை இல்லாமல் தயிரை எப்படி செய்வது என்பதை பற்றி நாம் இன்னும் தெரிந்து கொள்வோம்.

தற்போதைய கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் குளிர்ச்சி தரும் உணவுகளை சேர்த்துக் கொள்வது இன்றியமையாத ஒன்றாகும். அந்த வகையில் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய தயிரை கண்டிப்பாக நமது அன்றாட உணவுகளோடு எடுத்துக் கொள்ளவது மிகவும் சிறந்தது.

தயிர் தேடி அங்குமிங்கும் அலையாமல் வீட்டிலேயே சுத்தமான தயிர் செய்வது எப்படி என்பதை இங்கு பார்ப்போம். தேவையான பொருட்கள்.

1 லிட்டர்- கொதிக்கவைத்த பால்.
2 – பச்சை மிளகாய் அல்லது சிவப்பு மிளகாய் அல்லது 1 எலுமிச்சை ஆகிய பொருள்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் கொதிக்கவைத்த பாலை எடுத்து நன்றாக சூடாக்கவும். பின்னர் சில நிமிடங்கள் ஆற வைத்து, இரண்டு பச்சை அல்லது சிவப்பு மிளகாயை தண்டுடன் பாலில் போட விட வேண்டும். அல்லது அதில் இரண்டு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை விடவும். பிறகு பால் கிண்ணத்தை மூடி, 10 முதல் 12 மணி நேரம் வரை சூடான இடத்தில் ஒதுக்கி வைக்கவும். இப்போது நீங்கள் எதிர்பார்த்த உறைத் தயிர் தயாராக இருக்கும்.

Categories

Tech |