நாம் வீட்டில் பயன்படுத்தும் உணவு வகைகளில் ரசம் முக்கிய பங்கு வகிக்கிறது. எவ்வளவு உணவு உண்டாலும் அந்த உணவை ஜீரணிப்பதற்கு ரசம் முக்கியமானதாகும்.இதனை தயாரிப்பதற்கு தேவையான ரெசிபிகளை நாம் வீட்டிலேயே தயார் செய்யலாம்.
தேவையான பொருள்கள்.
மிளகாய் வற்றல் – 100 கிராம்.
தனியா – 250 கிராம்.
நல்ல மிளகு – 100 கிராம்.
சீரகம் -100 கிராம்.
துவரம் பருப்பு -125 கிராம்.
விரளி மஞ்சள் -50கிராம்.
காய்ந்த கறிவேப்பிலை – தேவையான அளவு.
கடுகு – 1 டேபிள் ஸ்பூன்.
இந்தப் பொருட்களை எடுத்து நாம் தயாராக வைத்துக்கொள்ள வேண்டும். இவற்றை நன்கு சுத்தம் செய்து வெயிலில் காய வைக்க வேண்டும்.
பின்னர் ஒவ்வொரு பொருளையும் தனியாக இளஞ்சூட்டில் வைத்து வானொலியில் வறுக்க வேண்டும்.
இவற்றை சற்று கரகரப்பாக இடிக்கவும் இப்போது ரசப்பொடி ரெடி. இதை காற்று புகாத பாட்டில்களில் அடைத்து உபயோகிக்கவும்.
வீட்டிலேயே குறைந்த அளவில் தயாரிப்பதானால் நன்றாகவே பருப்பை வறுக்கவேண்டும்.
மஞ்சளையும் லேசாக வறுத்து, மற்ற சாமான்களையும் வறுத்து சீரகத்தை வறுக்காமல் சேர்த்து அரைக்கவும். பின் மிக்ஸியில் பொடித்த பொடி போட்டு செய்தால், ரசம், தெளிவாகவும், வாசனையாகவும் இருக்கும்.