பெரும்பாலும் ஈக்கள் கோடை காலத்தில் மட்டுமே வரக்கூடியவை. ஆனால் இப்போது பரவலாக எல்லாப் பருவ நிலைகளிலும் வருகின்றன. சமைத்த உணவு, பழங்கள் என பலவற்றிலும் மொய்த்து நோய்களை பரப்பி விடுகிறது. ஈக்கள் ஆபத்தானவை கிடையாது. ஆனால் பல்வேறு நோய்த் தொற்றுகளை பரப்புகிறது. இப்போது வீட்டில் உள்ள பொருட்களை வைத்து கொசுக்களை விரட்ட என்ன செய்யலாம் என்பது குறித்து பார்க்கலாம். சிவப்பு மிளகாய் கலந்த தண்ணீரை ஈக்கள் மொய்க்கும் இடத்தில் தெளித்தால் ஈக்கள் ஓடிவிடும்.
ஒரு கப் தண்ணீரில் 3 டீஸ்பூன் மிளகாய்தூள் சேர்த்து சூரிய ஒளியில் ஏழு நாட்கள் வைக்க வேண்டும். பிறகு இதை வடிகட்டி பாட்டிலில் மாற்றி பயன்படுத்தலாம். துளசி செடியை எடுத்து தண்ணீரில் சேர்த்து 15 நிமிடங்கள் கொதிக்கவிட்டு பிறகு இறக்கி குளிர வைத்து வடிகட்டி பாட்டிலில் வைத்து பயன்படுத்தலாம். இந்த நறுமணம் ஈக்களுக்கு பிடிக்காத ஒன்று. எனவே ஈக்கள் மீண்டும் வராது.
இஞ்சி சபீர் என்பது ஒரு சக்தி வாய்ந்த ஈ விரட்டி. 4 கப் தண்ணீர் சேர்த்து ஒரு கிண்ணத்தில் இரண்டு ஸ்பூன் இஞ்சி பொடியை சேர்த்து நன்றாக கலந்து வடிகட்டி ஈக்கள் குவிந்திருக்கும் இடத்தில் அடித்தால் ஈக்கள் ஓடிவிடும்.