Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வீட்டில் ஆள் இல்லா நேரம்…. திருடுபோன 35 பவுன் நகை…. மர்ம நபர்கள் கைவரிசை….!!

லாரி டிரைவர் வீட்டில் 35 பவுன் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் மாவட்டம், காட்டூர் பகுதியில் வசித்து வருபவர் லாரி டிரைவர் முனியப்பன். இவருடைய மனைவி கலைச்செல்வி(35). இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் காட்டுப்பகுதியில் எடப்பாடி – மேட்டூர் பிரதான ரோட்டில் விவசாய நிலத்தில் வீடு கட்டி வசித்து வருகின்றனர். முனியப்பன் லாரியில் பொருட்களை ஏற்றிக்கொண்டு வட மாநிலத்திற்கு சென்று விட்டார். கலைச்செல்வி கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு கலைச்செல்வி தனது வீட்டை பூட்டி விட்டு அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதையடுத்து இன்று காலை கலைச்செல்வி தனது வீட்டிற்கு வந்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த கலைச்செல்வி வீட்டிற்குள் சென்று பார்த்தார். அப்போது பீரோவில் இருந்த 35 பவுன் நகை, ரொக்கம் அனைத்தும் திருடு போயிருந்தது.

இதுகுறித்து கலைச்செல்வி பூலாம்பட்டி காவல் நிலையத்தில் தகவல் அளித்தார். இத்தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீட்டை பார்வையிட்டு கொள்ளையடித்தவர்களின் கைரேகை பீரோ, கதவுகளில் பதிவாகி இருக்கிறதா என்று ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Categories

Tech |