இந்தியாவில் அத்தியாவசிய ஆவணங்களில் ஒன்றாக ஆதார் அட்டை இருக்கிறது. இது எந்த அரசு (அல்லது) அரசு சாரா வேலைசெய்ய அவசியமாகும். குழந்தைகளை பள்ளி, கல்லூரியில் சேர்க்க, வங்கியில் கணக்கு துவங்க, பான்கார்டு, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகிய அனைத்து வகையான ஆவணங்களையும் தயாரிக்க ஆதார்கார்டு தேவை. மேலும் அரசின் திட்டத்தில் பயன் பெற சிம்கார்டு வழங்க ரேஷன்கார்டும் அவசியம் ஆகும். அத்தகைய நிலையில் பெயர், பிறந்ததேதி, முகவரி, பாலினம் ஆகிய விபரங்கள் முற்றிலும் புதுப்பிக்கப்பட வேண்டும்.
உங்களது ஆதார் கார்டை புதுப்பிக்க விரும்பினால், மீண்டும் மீண்டும் ஆதார் மையத்துக்கு போக வேண்டிய அவசியமில்லை. ஆகவே வீட்டில் இருந்தவாறு குறைந்த கட்டணத்தைச் செலுத்தி அதார்அட்டையை புதுப்பிக்கலாம். இதுகுறித்து நாம் தெரிந்துகொள்வோம். பெயர், பிறந்ததேதி, பாலினம், முகவரி ஆகிய உங்களது டெமோகிராபிக் விபரங்களை எளிதாக புதுப்பிக்க முடியும். இவற்றிற்கு பதிவு செய்யப்பட்ட மொபைல்எண்ணில் உங்களுக்கு ஒரே ஒரு OTP தேவைப்படும். டெமோகிராபிக் விபரங்களைப் புதுப்பிக்க, நீங்கள் ரூபாய். 50 கட்டணம் செலுத்தினால் போதும்.
ஆதாரை புதுப்பிப்பது எப்படி?
# முதலாவதாக ஆதாரின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான ssup.uidai.gov.in ஐ பார்வையிட வேண்டும்.
#அடுத்து ப்ரோசீட் ஆப்ஷனை கிளிக்செய்ய வேண்டும்.
# பின் உங்களது ஆதாரின் 12 இலக்க எண்களை உள்ளிட்டு உள்நுழைந்த பக்கம் திறக்கும்.
# அதன்பின் நீங்கள் கொடுக்கப்பட்ட கேப்ட்சாவை நிரப்பி Send OTP என்பதைக் கிளிக்செய்ய வேண்டும். தற்போது உங்கள் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணில் வரும் OTP-ஐ உள்ளிடவேண்டும்.
# OTP-ஐ உள்ளிட்ட பின் மற்றொரு புது பக்கம் திறக்கும். இவற்றில் உங்களது பெயர், பாலினம், முகவரி, பிறந்ததேதி ஆகிய அனைத்து தனிப்பட்ட விபரங்களையும் புதுப்பிக்கும் விருப்பத்தைப் பெறுவீர்கள்.
# அடையாளச் சான்றாக பான்கார்டு, டிஎல், வாக்காளர் அடையாள அட்டை (அல்லது) ரேஷன் கார்டின் நகல் பதிவேற்றம் செய்யப்படவும்.
# அடுத்து ரூபாய்.50 கட்டணமாக டெபாசிட் செய்ய வேண்டும். நெட்பேங்கிங், கிரெடிட் (அல்லது) டெபிட் கார்டு வாயிலாக இக்கட்டணத்தைச் செலுத்தவும்.
# பின் நீங்கள் உள்ளிடும் பெயர், முகவரி, பாலினம் போன்றவற்றை மாற்ற உங்களது எண்ணில் சரிபார்ப்பு OTP வரும். உங்கள் விபரங்கள் ஆதாரில் புதுப்பிக்கப்படும்.