Categories
தேசிய செய்திகள்

வீட்டில் இருந்து பணியாற்றும் ஊழியர்களுக்கு விடுப்பு வழங்க தயக்கம்

வீட்டிலிருந்து பணிபுரியும் ஊழியர்களுக்கு நிறுவனங்கள் விடுப்பு வழங்க தயக்கம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

கொரோனா ஊரடங்கு  காரணமாக பெரும்பாலான நிறுவனங்களின் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றி வரும் நிலையில் அவர்களுக்கான விடுப்பு முறையில் மாற்றம் செய்ய நிறுவனங்கள் ஆலோசித்து வருகின்றனர்.கொரோனா பரவலை தடுக்க பல நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்கள் வீட்டில் இருந்தபடியே பணியாற்றி வருகின்றனர். வீட்டிலிருந்து பணியாற்றும் முறையால் ஊழியர்கள் கூடுதல் நேரம் பணியாற்ற நிர்பந்திக்கப் படுவதாகவும் அவர்களின் மன அழுத்தம் அதிகரிப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் அவர்களுக்கு மருத்துவ விடுப்பு அளிப்பதற்கு பெரும்பாலான நிறுவனங்கள் தயக்கம் காட்டி வருவதாகவும்  தகவல் வெளியாகி உள்ளது. மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் அளவுக்கான தீவிர சூழ்நிலைகளில் மட்டுமே மருத்துவ விடுப்பு வழங்க நிறுவனங்கள் தயாராக உள்ளதாகவும் பிற காரணங்களுக்கு மருத்துவ விடுப்பு வழங்க தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது.

Categories

Tech |