கழிவறையில் வைத்து அழுகிய நிலையில் பெண் சடலமாக மீட்க்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் ராமச்சந்திரன் பேட்டை பகுதியில் லட்சுமி என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் லட்சுமியின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கழிவறையில் லட்சுமி சடலமாக கிடந்துள்ளார்.
இதனை அடுத்து அழுகிய நிலையில் கிடந்த லட்சுமியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வழக்கு பதிந்த போலீசார் லட்சுமி இறந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.