Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வீட்டில் இருந்து வெளியேறிய மீனவர்… ஆற்றில் மிதந்த பிணம்… பல்வேறு கோணங்களில் விசாரணை…!!

2 தினங்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியேறிய மீனவரின் உடல் காவிரி ஆற்றில் மிதந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள சோழசிராமணி பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். மீனவரான இவர் சம்பவத்தன்று வீட்டின் ஏற்பட்ட தகராறு காரணமாக கோபித்துகொண்டு வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் வெளியே சென்ற அவர் 2 நாட்களாக வீட்டிற்கு வராமல் இருந்த நிலையில் அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர்.

இதனையடுத்து கண்ணனின் குடும்பத்தினர் ஜோடர்பாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து மாயமான கண்ணனை தேடி வந்துள்ளனர். இதற்கிடையே மோகனூர் காவிரி ஆற்றில் அடையாளம் தெரியாத இளைஞரின் உடல் மிதப்பதாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் மோகனூர் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். தகவலறிந்து சென்ற காவல்துறையினர் உயிரிழந்த இளைஞரின் உடலை மீட்டு உடற்கூராவிர்க்காக நாமக்கல் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதனைதொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த நபர் 2 தினங்களுக்கு முன்பு மாயமான கண்ணன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் காவல்துறையினர் மீனவரின் குடும்பத்தினருக்கு தகவல் அளித்த நிலையில் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இதனையடுத்து கண்ணன் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |