வீட்டில் இருந்தவாறு வேலை செய்வதை ஊக்குவிக்கும் வகையில் ஒரு மாதத்திற்கு இலவச பிராட்பேண்ட் சேவை வழங்கப்படும் என பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய – மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.
வீட்டிலிருந்து பணியாற்றுவோர் தற்போது சந்தித்து வரும் பிரச்னையாக இணைய தேவை உள்ளது. இந்த நிலையில் வீட்டில் இருந்து வேலை செய்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் பிஎஸ்என்எல் நிறுவனம், ISP Work @ Home என்ற புதிய பிராட்பேண்ட் திட்டத்தை இலவசமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
We Care….#BSNL for the benefit of the citizens introducing Promotional Standalone Broadband Plan FREE OF COST to all existing landline customers to contain the spread of 2019-nCoV (Novel Coronavirus) outbreak. @BSNLCorporate @CMDBSNL @CGM_GUJ_BSNL #IndiaFightsCorona #COVID19 pic.twitter.com/N3KPkZmMxV
— BSNL_Gujarat (@BSNL_GJ) March 20, 2020
இதன் அடிப்படையில் பிஎஸ்என்எல் லேண்ட்லைன் வாடிக்கையாளர்கள் அத்தனை பேருக்கும் இலவச இணைய சேவை Work@Home என்னும் டேட்டா ப்ளான் மூலமாக வழங்கப்படுகிறது. இதனால் தினமும் அத்தனை லேண்ட்லைன் வாடிக்கையாளர்களுக்கும் 10Mbps இணைய வேகத்தில் தினமும் 5ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்பட உள்ளது.
பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் இந்த இலவச பிராட்பேண்ட் சந்தா உங்களுக்கு வேண்டுமென்றால் உங்களிடம் பிஎஸ்என்எல்லின் லேண்ட்லைன் இணைப்பு கட்டாயம் இருக்க வேண்டும். பி.எஸ்.என்.எல் லேண்ட்லைன் வைத்துள்ள தற்போதுள்ள பிஎஸ்என்எல் பயனர்கள் மட்டுமே இந்த திட்டத்தை இலவசமாகப் பயன்படுத்த முடியும் என்று பி.எஸ்.என்.எல் நிறுவனம் அறிவித்துள்ளது குறிப்பிட்டத்தக்கது.