உலகை அச்சுறுத்தும் கோரோனோ வீட்டில் இருந்து பணிபுரியும் ஊழியர்கள் செய்ய தெரிந்துகொள்ள வேண்டியவை.
- சரியான திட்டமிடுதலுடன் சரியான நேரத்தில் வேலைகளை செய்து முடிப்பது சிறந்தது.
- இரவு முழுவதும் வேலை பார்த்து விட்டு, காலையில் அதிக நேரம் தூங்குவதை தவிர்க்க வேண்டும்.
- வீட்டில் இருப்பதால் கண்ட நேரங்களில் நொறுக்குத் தீனிகளை அதிக அளவு சாப்பிடாதீர்கள்.
- ஆரோக்கியமான உணவுகள், ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உரிய நேரத்திற்கு சாப்பிடுவது நல்லது.
- ஜிம் மூடப்பட்டுள்ளதால் உடற்பயிற்சி மேற்கொள்வது வீட்டிலிருந்தே தொடரலாம்.
- வீட்டில் தானே இருக்கிறோம் என அலட்சியம் இல்லாமல் கைகளை அடிக்கடி கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
- எல்லாவற்றையும்விட வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியம்.