Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வீட்டில் இருந்தே புகார் அளிக்கலாம்…. பதவியேற்ற “3 வாரங்களில்” நிகழ்த்திய சாதனை…. அசத்தும் போலீஸ் சூப்பிரண்டு….!!!

முதியவர்கள் வீட்டில் இருந்தபடியே புகார் அளிக்கலாம் என போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு தினமும் புகார் அளிப்பதற்காக ஏராளமானோர் வருகின்றனர். இதில் குறிப்பாக 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் தான் அதிகம் வருகின்றனர். நான் புதிய போலீஸ் சூப்பிரண்டாக பதவி ஏற்ற நாளில் இருந்து இதுவரை 424 மனுக்கள் வந்துள்ளது. இந்த மனுக்கள் 4 வகையாக பிரிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட காவல் துறைக்கு அனுப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு புகார் அளிக்க வரும் முதியவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே இவர்களின் நலனை கருத்தில் கொண்டு வீட்டில் இருந்தபடியே போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளிப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

அதாவது 04652 – 220167 என்ற எண்ணிற்கு தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை புகார் தெரிவிக்கலாம். இந்த புகார்கள் சம்பந்தப்பட்ட காவல் துறைக்கு அனுப்பப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். அதன்பிறகு வீடியோ கால் வசதி இருந்தால் அதன்மூலம் நான் தொடர்பு கொண்டு உங்களுடைய புகாரை நானே விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பேன் என கூறினார். அதன்பிறகு இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்.

இதனையடுத்து பொதுமக்கள் சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து 24 மணிநேரமும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளிக்கலாம். நான் பொறுப்பு ஏற்று 3 வாரங்கள் ஆகிறது. இந்த 3 வாரங்களில் குட்கா வழக்கில் 118 பேரும், சட்ட விரோதமாக மது விற்பனை செய்த வழக்கில் 279 பேரும், கஞ்சா வழக்கில் 44 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து 580 கிலோ குட்கா மற்றும் 13 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதன்பிறகு 48 மணி நேரத்தில் 2 திருட்டு வழக்குகளை விசாரித்து 288 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என கூறினார்.

Categories

Tech |