இன்டர்நெட் பயன்பாடு எளிதாகியுள்ள இந்த காலத்தில், ரேஷன்அட்டை வாங்க ஆன்லைன் வசதியை அரசு வழங்கி இருக்கிறது. அந்த வகையில் நீங்கள் உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவராக இருப்பின், ரேஷன் அட்டைக்கு நீங்கள் நுகர்வோர் துறையின் அதிகாரப்பூர்வமான இணையதளத்துக்கு போகவேண்டும்.
# முதலாவதாக இந்த இணையதளத்தை ( https://fcs.up.gov.in/FoodPortal.aspx ) பார்வையிடவும்.
# அதன் முகப்புப்பக்கத்தில் உள் நுழைந்து “NFSA 2013” என்பதை கிளிக் செய்யவேண்டும்.
# அடுத்ததாக சில விபரங்களை அங்கு நிரப்பவேண்டும்.
# ஆதார்கார்டு, இருப்பிடச்சான்றிதழ், வருமானச்சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் வங்கிக்கணக்குப் புகைப்படம் போன்றவற்றை பதிவேற்றம் செய்யவும்.
# அதன்பின் ரேஷன் கார்டு கட்டணத்தினை பூர்த்தி செய்த பின் சமர்ப்பி என்ற ஐகானை கிளிக் செய்ய வேண்டும்.
# ரேஷன் அட்டைக்கு 5 -45 ரூபாய் வரை செலவு ஆகும்
ஒவ்வொருவரும் அவரவர் பிரிவின் படி ரேஷன் அட்டைக்கு ரூ.5 -ரூ.45 வரை கட்டணம் செலுத்தவேண்டும். ஆன்லைனுக்கு பின் உங்களின் இத்தகவல்கள் ஃபீல்டீல் இருக்கும் அதிகாரிகளால் சரிபார்க்கப்படும். உங்களது ஆவணங்களும், தகவல்களும் சரியாக இருப்பின் ஒரு மாதத்திற்குள் ரேஷன் அட்டையானது துறையால் வழங்கப்படும்.