ஹோட்டல் உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள திருநகர் காலனி பம்பிங் ஸ்டேஷன் ரோடு பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயகுமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஈரோட்டில் ஹோட்டல் வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் ஹோட்டல் தொழிலில் அதிக நஷ்டம் ஏற்பட்டதால் விஜயகுமார் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனையடுத்து தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஜயகுமார் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
அப்போது விஜயகுமாரை பார்க்க வந்த நண்பர் ஒருவர் அவர் தூக்கில் சடலமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் விஜயகுமாரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.