கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆனைகட்டி பகுதியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆவின்பால் சொசைட்டியில் வாகன ஒப்பந்ததாரராக இருக்கிறார். இவர் அர்ச்சனா(21) என்ற மகள் இருந்துள்ளார். இவர் மேட்டுப்பாளையத்தில் இருக்கும் வனக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் அர்ச்சனாவுக்கும் அவரது பெற்றோர்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் மன உளைச்சலில் இருந்த அர்ச்சனா நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அர்ச்சனாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.