Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வீட்டில் இருந்த பூச்சி மருந்து…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பறிபோன தொழிலாளி உயிர்….!!

வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள ஜே.கே.கே நகரில் செல்வராஜ்(46) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சில ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் இருந்த பூச்சி மருந்தை எடுத்து செல்வராஜ் குடித்ததாக கூறப்படுகிறது.

இதனையறிந்த குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமத்தனர். இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக மருத்துவர்கள் செல்வராஜை சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி செல்வராஜ் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து குமாரபாளையம் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |