கூலித்தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து 1 லட்சம் ரூபாயை திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தேனி மாவட்டம் வீரபாண்டியை அடுத்துள்ள போடேந்திரபுரம் காளியம்மாள் கோவில் தெருவில் மாரிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். கூலித்தொழிலாளியான இவர் வீட்டில் கடந்த 2-ஆம் தேதி விசேஷம் நடந்துள்ளது. அப்போது மொய் பணமாக கிடைத்த 1 லட்சம் ரூபாயை அவர் பீரோவில் வைத்தாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சம்பவத்தன்று வேலைக்கு சென்ற மாரிச்சாமி திரும்பி வீட்டிற்கு சென்று பார்த்தபோது பீரோவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் பீரோவில் பார்த்தபோது உள்ளே இருந்த 1 லட்சம் ரூபாய் திருடு போயிருந்தது. இதுகுறித்து மாரிச்சாமி வீரபாண்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.