லாரி டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் காரிப்பட்டி அடுத்துள்ள காட்டு வளவை பகுதியில் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். லாரி டிரைவரான இவர் ஏற்கனவே 2 திருமணம் செய்து கொண்டு தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் மூன்றாவதாக அம்சவேணி என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டு நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள வி.நகரில் வசித்து வந்துள்ளார். இதனையடுத்து குமார் வீட்டில் தனியாக இருந்த சமயத்தில் திடீரென தனது அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனையறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக ராசிபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தகவலறிந்து விரைந்து சென்ற காவல்துறையினர் குமாரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்து குமார் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.