கனடாவில் இளம்பெண் ஒருவர் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கனடா எட்மண்டன் பகுதியில் கெலிசி தண்டர்(23) என்ற இளம்பெண் வீட்டில் மயக்கமாக கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து காவல்துறையினர் மருத்துவ உதவி குழுவை அழைத்துக்கொண்டு விரைந்து சென்றனர். பின்னர் கெலிசியை மருத்துவர்கள் பரிசோதித்துப் பார்த்தபோது அவர் இறந்துவிட்டார் என தெரிய வந்தது.
இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் இது கொலை வழக்கு என தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வயட் (26) என்ற இளைஞர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கிற்கும் அந்த இளைருக்கும் என்ன சம்பந்தம் என்பது தெரிவிக்கப்படவில்லை. மேலும் இதுகுறித்த தகவல்கள்அடுத்த கட்ட விசாரணையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.