Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

வீட்டில் உறங்கிய 13 வயது சிறுமி… திடீரென உள்ளே நுழைந்த மர்ம நபர்… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!!

பாலக்கோடு அருகே வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

மகேந்திரமங்கலம் அடுத்துள்ள பிக்கிலி நாயகன் அல்லி என்ற பகுதியில் 13 வயது சிறுமி தனது பெற்றோருடன் நேற்று இரவு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென வீட்டுக்குள் நுழைந்த காற்று கொள்ளையை சேர்ந்த மூட்டை தூக்கும் தொழிலாளி திம்மபன் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.

உடனடியாக சிறுமி அலறியதால், சத்தம் கேட்டு குடும்பத்தினர் எழுந்தனர். வீட்டுக்குள் நுழைந்த அந்த நபரை பிடிப்பதற்கு முயற்சி செய்தபோது அவர் தப்பி ஓடிவிட்டார். இதுபற்றி போலீசாரின் குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Categories

Tech |