வீட்டிலிருந்து நிரந்தரமாக கரப்பான் பூச்சியை ஒழிப்பது எப்படி என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பெரும்பாலும் நம்முடைய வீடுகளில் கழிப்பறை முதல் சமையலறை வரை எல்லா பக்கமும் தொல்லை கொடுப்பது இந்த கரப்பான் பூச்சிகள் ஆகும். கரப்பான் பூச்சிகள் ஒவ்வொரு வீடுகளிலும் அதிக அளவில் இருக்கும். அதுவும் சமையலறையில் இருந்தால் அதை பார்ப்பதற்கு அருவருப்பாக இருக்கும். இது பல உடல்நலக் கேடுகளை உண்டாக்கும். இதனால் வீட்டையும், சுற்றுப்புறத்தையும் கரப்பான்பூச்சிகள் இல்லாமல் எப்படி பார்க்கலாம் என்பதை பற்றி இதில் தெரிந்து கொள்வோம். கரப்பான்பூச்சிகள் வெப்பமான மற்றும் ஈரப்பதமான காலநிலையிலும் செழித்து வளரும். பழைய அழுகிய மர கதவுகள் மற்றும் ஜன்னல்கள் கொண்ட பழைய வீட்டில் கரப்பான்பூச்சி அதிகமாக இருக்கின்றது.
கரப்பான்பூச்சியை ஒழிக்க ஒரு முட்டை வெள்ளை கருவில் இரண்டு ஸ்பூன் போரிக் பவுடர், இரண்டு ஸ்பூன் கோதுமை மாவு சேர்த்து கெட்டியாக பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும். இந்த உருண்டைகளை கரப்பான் பூச்சி வரும் இடங்கள், அட்டைப்பெட்டிகள், மூலைகளில் வைத்தால் கரப்பான் பூச்சி தொல்லை முழுமையாக நீங்கி விடும்.