நம் வீட்டு பூஜை அறையில் நாம் பயன்படுத்தும் முக்கிய பொருள்களில் ஒன்று பச்சைகற்பூரம். இது செல்வத்தை ஈர்க்கும் தன்மை கொண்டது என்று கூறுகிறார்கள். இதனை ஒரு மஞ்சள் துணியில் முடிச்சாக கட்டி குபேர மூலையில் வைத்து பூஜை செய்தால் வீட்டில் பணம் எப்போதும் தங்கும். பச்சைக்கற்பூரம் இயற்கையாகவே வாசனையை தரும் தன்மை உடையது. இதற்கு மிகப்பெரிய சக்தி உள்ளது. இதை வீட்டில் எங்கு வைத்தாலும் நிம்மதி கிடைக்கும். இந்த வாசனை வீட்டிலுள்ள துஷ்ட சக்திகளை வீட்டை விட்டு வெளியே விரட்டும்.
இதனாலேயே நம் வீட்டில் எப்பொழுதும் நிம்மதி கிடைக்கும். பச்சை கற்பூரத்தை பணம் இருக்கும் இடத்தில் வைத்தால் அங்கு எதிர்மறையான எந்த சக்திகளும் நுழையமுடியாது. இரண்டு பச்சை கற்பூரத்தை ஒரு பேப்பரில் வைத்து மடித்து ஒரு பரிசில் வைத்தால் பணம் குறையாது. தொழில் விருத்தி அடைய, செல்வம் பெருக கட்டாயம் பச்சை கற்பூரத்தை பயன்படுத்துங்கள். பீரோ போன்ற இடங்களில் கட்டாயம் பச்சை கற்பூரத்தை பயன்படுத்துங்கள். சிறிய பச்சை கற்பூரத்தை எடுத்து அதை துணியில் வைத்துக் கட்டி வைத்துவிட்டால் மிகவும் நல்லது. இதன் வாசனை மிகுந்த இடங்களில் மகாலட்சுமி குடி கொள்வாள் என்று ஆன்மீகத்தில் கூறப்படுகின்றது.