Categories
ஆன்மிகம் இந்து

வீட்டில் எளிமையாய்… “விநாயகர் பூஜை எப்படி நடத்துவது”…? இத பாத்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

வீட்டில் எவ்வாறு எளிமையான முறையில் விநாயகர் பூஜை நடத்தலாம் என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

விநாயகர், கணபதி, ஆனைமுகன், ஈசன் மைந்தன், தொந்தி கணபதி என இடத்திற்கு ஏற்றார் போல் பல பெயர்களில் அழைக்கப்படுபவர் பிள்ளையார். பிள்ளையாரை பிடிக்காதவர் எவரும் இருக்க மாட்டார் என்பதற்கு இணங்க, கோயில், வழிபாடு என்றாலே முதலில் அங்கு நிலைகொண்டிருப்பவர் ஆனைமுகனே.

விநாயகர் மிகவும் எளிமையை விரும்பக்கூடியவர். அதனால்தான் என்னவோ, பிடித்து வைத்தால் பிள்ளையார் என்று முன்னோர்கள் சொல்வார்கள். அதன்படியே, கூப்பிட்டவர் குரலுக்கு தேடிவந்து அருள் புரியும் ஆனைமுகனின் வழிபாடும் எளிமையானதே ஆகும்.

கல், மண், மரம், செம்பு முதலியவற்றால் இறைவனின் திருவுருவங்களைச் செய்ய வேண்டும் என்று ஆகமங்கள் கூறுகின்றன. ஆனால், மண், பசுஞ்சாணம், மஞ்சள், மரக்கல், கருங்கல், பளிங்குக்கல், தங்கம், வெள்ளி போன்ற உலோகங்கள், முத்து, பவளம் போன்ற ரத்தினங்கள், தந்தம், வெள்ளெருக்கு வேர், அத்திமரம், பசு வெண்ணெய், அரைத்த சந்தனம், வெண்ணீறு, சர்க்கரை, வெல்லம் ஆகியவற்றால் விநாயகர் வடிவத்தை அமைக்கலாம்.

பிள்ளையாரை வழிபடும் போது, அவருக்கு பிடித்தமான உணவு பதார்த்தங்களை வைத்து வழிபடலாம். முடியாதவர்கள், சிறு தேங்காய் மட்டும் வைத்து வழிபட்டாலே அதனையும் ஐங்கரன் ஏற்றுக்கொள்வார்.

விநாயகருக்கு மோதகம், கரும்பு, அவல், பொரி, சுண்டல், கற்கண்டு, கொழுக்கட்டை, லட்டு, பழவகைகள் ஆகியவற்றைப் படைக்கலாம். அதே போல் பிள்ளையாருக்கு உகந்த அருகம்புல் மாலையை அணிவிக்கலாம். எருக்கம்பூ மற்றும் தும்பைப் பூக்களையும் மாலையாக அணிவிக்கலாம். அதே போல, புன்னை, மந்தாரை, மகிழம், பாதிரி, அரளி, ஊமத்தை, சம்பங்கி, முல்லை, கொன்றை, செவ்வரளி, வில்வம், குருந்தை, பவளமல்லி, ஜாதிமல்லி, மாதுளம் ஆகியவற்றின் பூக்களையும் வைத்து பூஜை செய்வது நன்மை பயக்கும்.

Categories

Tech |