நெல்லையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் புவனேஸ்வரி என்பவர் வசித்து வந்தார். இவருக்கு 2 வயதான பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் இவருடைய கணவருக்கும் புவனேஸ்வரிக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதன் விளைவாக அவர் கோபித்துக்கொண்டு அவருடைய தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் புவனேஸ்வரி திடீரென்று வீட்டில் யாருமில்லாத சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.