Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து…. எரிந்து நாசமான பொருட்கள்…. போலீஸ் விசாரணை…!!

மின் கசிவினால் தீ விபத்து ஏற்பட்டு வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பாடாலூர் கிராமத்தில் மாணிக்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது குடும்பத்தினருடன் வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் வீட்டில் இருந்த ஏ.சி-யில் மின் கசிவு ஏற்பட்டு திடீரென வீடு முழுவதும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்ததும் அக்கம்பக்கத்தினர் உடனடியாக வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைத்து விட்டனர். ஆனால் இதை தீவிபத்தில் வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமானது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |