Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“வீட்டில் ஏற்பட்ட மின்கசிவு” உரிமையாளருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

வீட்டில் பற்றி எரிந்த தீயை பொதுமக்கள் நீண்ட நேரம் போராடி அனைத்துள்ளனர் 

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம் கிராமத்தில் கருப்பன் -காசியம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இவர்களது குடிசை வீடு மின்கசிவு காரணமாக தீ பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் நீண்ட நேரம் போராடி தீயை அனைத்தனர். இந்த விபத்தில் வீட்டில் இருந்த 1 லட்சத்து 50 ஆயிரம்  ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் சம்பத், ஊராட்சி தலைவர் சீனிவாசன், துணைத்தலைவர் தாமரைச்செல்வி ஆனந்தன் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து  சென்று ஆய்வு செய்துள்ளனர். இதனையடுத்து அவர்களுக்கு சேலை, வேட்டி, உணவு போன்ற பொருட்களை வழங்கியுள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |