பூஜை அறையில் செய்ய கூடியது மற்றும் நாம் அனைவரும் வீட்டில் கடைபிடிக்க வேண்டிய ஆன்மிக தகவல்..!
தினமும் காலையும், மாலையும் நல்ல மனதோடு கடவுள் பெயரை உச்சரிக்க வேண்டும். தினமும் காலை எழுந்தவுடன் பார்க்க வேண்டியவை கோவில் அல்லது கோவில் கோபுரம் அல்லது தெய்வப் படங்கள், மேகம் சூழ்ந்த மலைகள், தீபம், கண்ணாடி, உள்ளங்கை, கன்றுடன் கூடிய பசு போன்றவை ஆகும்.
வீட்டின் கிழக்குப் பக்கம் துளசிச் செடி, வேப்ப மரம் இருக்க வேண்டும். அதனால் எந்தவித நோயும் வராது, விஷ ஜந்துக்களும் நம்மை அண்டாது. வீடுகளில் பூஜை அறை என்று தனியாக வைத்துக் கொண்டிருந்தால், அங்கு தேவை இல்லாத உடைந்த பொருட்களைச் சேர்த்து வைக்ககூடாது.
சிவன், பார்வதி, விநாயகர், முருகர் உள்ளிட்ட படங்கள் இருந்தால் அதை கிழக்கே நோக்கி மாற்றி வைக்க வேண்டும். அதனால் வீட்டில் உள்ள தோஷம் குறைபாடுகள் நீங்கி விடும். செவ்வாய்க்கிழமைகளில், வெள்ளிக்கிழமைகளில் பூஜை அறையை தண்ணீர் ஊற்றிக் கழுவ வேண்டும். நமது வலது உள்ளங்கையில் மகாலட்சுமி இருப்பதால் காலை எழுந்ததும் வலது உள்ளங்கையைப் பார்க்க வேண்டும்.
அமாவாசை, திவசம் ஆகிய நாட்களில் வாசலில் கோலம் போடகூடாது. அமாவாசை, பவுர்ணமி மாதப்பிறப்பு, ஜன்ம நட்சத்திரம் ஆகிய தினங்களில் எண்ணெய் தேய்த்துக் குளிக்கக்கூடாது. பொதுவாக நெற்றிக்கண் திலகம் இடாமல் பூஜை செய்யக்கூடாது பெண்கள். பூசணிக்காயை உடைக்க கூடாது.
கர்ப்பிணி பெண்கள் தேங்காயை உடைக்கக்கூடாது. மற்றவர்கள் தேங்காய் உடைக்கும் இடத்தில் இருக்கக்கூடாது. சாமி படங்களுக்கு வாசனை இல்லாத பூக்களைக் சூடக்கூடாது. வீட்டின் நிலைகளில் குங்குமம், மஞ்சள் வைக்க வேண்டும். வீட்டு பூஜையில் கற்பூர தீபம் தானே குளிர்ந்து விடுவது தான் நல்லது. அதை நாம் அணைக்கக் கூடாது.
விளக்கு ஏற்றும் போது மற்றவர்கள் ஏற்றி வைத்த விளக்கின் மூலமாக நம் விளக்கை ஏற்றக்கூடாது. தீப்பெட்டி மூலமாக நாம் தான் விளக்கை ஏற்ற வேண்டும். சனி பகவானுக்கு வீட்டில் நெய் விளக்கு ஏற்றக்கூடாது. நாம் வீட்டில் கடவுளை வணங்கும்போது நின்றவாரே தொழுதல் குற்றமாகும். அமர்ந்தபடி தான் தொழ வேண்டும். யாராவது தூங்கிக் கொண்டிருக்கும்போது காலை மற்றும் மாலை வேளைகளில் விளக்கேற்றக்கூடாது. பூஜையின்போது விபூதியை நீரில் குழைத்து பூசக் கூடாது.