Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வீட்டில் குடித்துவிட்டு கும்மாளம்…. வீடியோ எடுத்ததால்…. மனைவியை தாக்கிய நண்பர்…!!!

கன்னியாகுமரி மாவட்டம் வாள்வச்சகோஷ்டத்தில் கிரிஜா என்பவர் தனது கணவர் அனீஸ் மற்றும் 3 பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். கிரிஜா தூய்மை பணியாளராக வேலை செய்து வருகிறார். இவரது கணவரான அனீஸ் மது பழக்கத்திற்கு அடிமையானவர் ஆவார். இந்நிலையில் சம்பவத்தன்று அவர் தனது வீட்டிற்கு நண்பர்களை வரவழைத்து மது விருந்து அளித்துள்ளார். அப்பொழுது கிரிஜா மற்றும் தனது மூன்று பெண் குழந்தைகளும் சேர்ந்து அதனை வீடியோ எடுத்துள்ளனர்.

இந்நிகழ்வால் கோபமடைந்த அனீஸின் நண்பர் ஒருவர் கிரிஜாவை தாக்கி உள்ளார். அதனைத் தொடர்ந்து கிரிஜாவை அவரது கணவரும் மதுபோதையில் சரமாரியாக தாக்கியுள்ளார். இந்நிகழ்வை கிரிஜாவின் மகள்கள் செல்போனில் பதிவு செய்த சமூகதளத்தில்  வெளியிட்டனர். இக்காட்சியானது சமூகவலைத்தளத்தில் தற்பொழுது வைரலாகி வருகிறது.

Categories

Tech |