Categories
பல்சுவை

வீட்டில் சமையல் எரிவாயுவை எப்படி சிக்கனமாக பயன்படுத்துவது?….. வாங்க பார்க்கலாம்….!!!

நாட்டில் சமையல் எரிவாயுவின் விலை  நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு நம்மால் முடிந்த தீர்வு எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துவதே ஆகும். அந்தவகையில் தற்போது எரிபொருளை சிக்கனமாக எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.

* சமையல் செய்தால் பாத்திரத்தை மூடி வைத்து செய்யுங்கள். இதனால் சீக்கிரமாக சமையல் தயார் ஆவதுடன் எரிபொருளும் மிச்சம் ஆகும்.
* வேகவைப்பது, குழம்பு போன்றவற்றுக்கு பிரஷர் குக்கர் பயன்படுத்தலாம். சட்டென வெந்து விடுவதுடன் எரிபொருளும் மிச்சம் ஆகும்.
* ஆட்களுக்கு ஏற்பசரியான அளவு பாத்திரம் கொண்டு சமைக்க வேண்டும். குழிவான அடிப்பகுதி கொண்ட பாத்திரத்துக்கு பதிலாக தட்டையான அடிப்பகுதி கொண்ட பாத்திரத்தில் சமைக்கும் போது வெப்பம் சீராக பரவி சமையல் சீக்கிரமாக முடிந்து எரிபொருள் பயன்பாடும் குறையும்.
* தண்ணீரோ குழம்போ கொதிக்கும் போது அடுப்பை சிறுதீயில் வைத்துவிடுவது நல்லது. இதனால் அவை பொங்கி வழிந்து அடுப்பு அணைத்து எரிபொருள் வீணாகாது.
*  கேஸ் அடுப்பில் பர்னர்களை அடிக்கடி தூசு இல்லாமல் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். இதனால் எரிபொருளை அதிக அளவு மிச்சப்படுத்த முடியும்.

 

 

 

Categories

Tech |