வீட்டில் சாம்பிராணி தூபம் செய்வதால் ஏற்படும் நன்மைகள் தொியுமா? இனி கட்டாயம் பின்பற்றுங்கள்.
நம் முன்னோர்கள் செய்யும் அனைத்து விஷயங்களும் ஒரு விஷயம் கண்டிப்பாக இருக்கும். அதில் ஒரு முக்கிய உண்மை தான் சாம்பிராணி தூபம் செய்வது.
இன்றைக்கும் குழந்தைகள், பெண்கள் குளித்த பிறகு கூந்தலை சாம்பிராணி தூபம் கொடுத்து ஆத்துகிறாா்கள்.
அவை நறுமணம் த௫வது மட்டுமல்லாமல் நம் உடலுக்கும் பல நன்மைகள் த௫வதாக திகழ்கிறது. வீட்டில் சாம்பிராணி தூபம் கொடுப்பது மூலம் கண் திரிஷ்டி , பிறரது பொறாமை குணம், தீய சக்தி என அனைத்து வித பிரச்சினைகளும் நீங்கும் என்பதற்கே சாம்பிராணி தூபம் செய்யும் வழக்கம் கொண்டுள்ளோம்.
சாம்பிராணியுடன் எதையெல்லாம் சேர்த்து தூபமிட்டால் நல்லது என்று பாா்ப்போம் :
சாம்பிராணியுடன் அகில் சேர்த்து தூபமிட்டால் குழந்தை பேறு உண்டாகும்.
தூதுவளை சேர்த்து தூபமிட்டால் வீட்டில் கடவுளின் அருள் நிலைத்திருக்கும்.
சந்தனம் சேர்த்து தூபமிட்டால் வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் உண்டாகும்.
அறுகம்புல் சேர்த்து தூபமிட்டால் வீட்டில் உள்ள தோஷங்கள் தீ௫ம்.
நினைத்த காரியம் நிறைவேற வெட்டிவேர் தூபமிடுங்கள்.
வேப்பிலையை சேர்த்து தூபமிட்டால் நோய்கள் வராமல் தடுக்கும் சக்தி உண்டாகும்.
மேலும் ஜவ்வாது போட்டு தூபமிட்டால் வீட்டில் திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும் என்பது நம்பிக்கை.
பில்லி சூனியம் போன்றவை நீங்க வேப்பம் பட்டை சேர்த்து தூபமிட்டால் நல்லது.