Categories
தேசிய செய்திகள்

“வீட்டில் தனியாக இருந்த சிறுமி” கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து தீ வைத்து எரித்த கொடூரம்….. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

உத்திரபிரதேசம் மாநிலம் பிலிபட் மாவட்டத்தில் உள்ள மாதோடண்டா கிராமத்தில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இந்த சிறுமி தினந்தோறும் பள்ளிக்கு சென்று வரும்போது அப்பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்கள் கேலி செய்துள்ளனர். கடந்த 2-ம் தேதி சிறுமி பள்ளியை விட்டு வரும்போது வழக்கம் போல் இளைஞர்கள் கேலி செய்ததால் ஆத்திரம் அடைந்த சிறுமி தினேஷ் யாதவ் என்ற வாலிபரை கன்னத்தில் அறைந்துள்ளார். இதனால் தினேஷ் யாதவை சக நண்பர்கள் பெண்ணிடம் அடி வாங்கியவன் என்று கூறி கேலி செய்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த தினேஷ் யாதவ் சிறுமியை பழிவாங்க வேண்டும் என்று நினைத்துள்ளார். இதன் காரணமாக தினேஷ் யாதவ் தன்னுடைய நண்பர் அமர்சிங் உதவியுடன் கடந்த 7-ம் தேதி வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் அத்துமீறியுள்ளார். அதன்பின் 2 பேரும் சேர்ந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இருப்பினும் ஆத்திரம் அடங்காத தினேஷ் சிறுமியின் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார். சிறுமியின் வாயில் துணி கட்டி இருந்ததால் அவரால் சத்தம் போட முடியவில்லை. இந்நிலையில் சிறுமியின் தந்தை வீட்டிற்கு வந்து பார்த்தபோது தன்னுடைய மகள் உடல் எரிந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அவரை உடனடியாக மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு சுயநினைவு வந்த சிறுமி தனக்கு நடந்த கொடுமைகளை கூறியுள்ளார். சிறுமியின் உடல் 80 சதவீதம் அளவுக்கு தீயினால் எரிந்ததால் ஆபத்து கட்டத்தை தாண்டவில்லை என மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |