புதுச்சேரி காரைக்கால் பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியின் பெற்றோர் வேலைக்குச் சென்று விட்ட நிலையில் காம்பவுண்ட் சுவரில் உள்ள கதவை பூட்டிவிட்டு சிறுமி மட்டும் உள்ளே இருந்துள்ளார். அந்த பகுதியை சேர்ந்த வெங்கடேஷ்(25) என்பவர் சிறுமி தனியாக இருப்பதை அறிந்து வீட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறி குதித்து உள்ளே சென்றுள்ளார். அதன் பிறகு தனியாக இருந்த சிறுமியிடம் உனக்கு நான் மாமன் முறை என்று கூறி நான் செய்வதை யாரிடமும் சொல்ல கூடாது என்று கையை பிடித்து இழுத்துள்ளார். அப்போது சத்தம் போட்ட அந்த சிறிமியின் வாயை உடனே மூடி அத்துமீறி நடந்து கொண்டதாக சொல்லப்படுகிறது.
தொடர்ந்து சிறுமியின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததால் வெங்கடேஷ் மீண்டும் சுவர் ஏறி குதித்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காரைக்கால் போலீசில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். அதன் பிறகு காரைக்கால் மாவட்ட சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்த நீதிபதி 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து வெங்கடேஷ் புதுச்சேரி கிளை சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டார்.