13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த தாத்தாவை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை கிராமத்தில் 13 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சிறுமியின் பெற்றோர் வீட்டில் இல்லாததை கவனித்த சிறுமியின் தாத்தா வீட்டிற்குள் சென்று சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனையடுத்து உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர் சிறுமி 3 மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளனர்.
இதனையடுத்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுமியிடம் விசாரித்த போது சிறுமி நடந்தவற்றை கூறி கதறி அழுதுள்ளார். இதுக்குறித்து சிறுமியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சிறுமியை கர்ப்பமாக்கிய தாத்தாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்