Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வீட்டில் தனியாக இருந்த சிறுமி…. உறவினர் செய்த செயல்….. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் 6-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி வசித்து வருகிறார். இந்த மாணவியின் தாயாருக்கு கடந்த மார்ச் மாதம் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் மாணவியின் தாய் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். இந்நிலையில் மாணவி வீட்டில் தனியாக இருந்தபோது உறவினரான ரியாஸ்(26) என்பவர் அங்கு சென்று மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனையடுத்து ரியாஸ் தொடர்ந்து மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இது குறித்து மாணவி தனது தாயிடம் தெரிவித்து கதறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் குளச்சல் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ரியாஸை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |