Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

வீட்டில் தனியாக இருந்த தம்பதி…. கத்தி முனையில் மிரட்டிய முகமூடி கொள்ளையர்கள்…. வேலூரில் பரபரப்பு….!!!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள கீழப்பட்டி கிராமத்தில் ராஜேந்திரன்-சுபா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் கீழடிப்பட்டி பஸ் நிறுத்தம் அருகில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வருகின்றனர். ராஜேந்திரனுக்கு அறுவை சிகிச்சை நடந்ததால் வீட்டில் ஓய்வெடுத்து வருகின்றார். இதனை அடுத்து நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் ராஜேந்திரனின் மனைவி சுபா முன்பக்கம் உள்ள இரும்பு கேட்டை பூட்டிவிட்டு சாவியை பூட்டின் மீது தொங்கவிட்டு வந்துள்ளார். இதனை அடுத்து இருவரும் அயர்ந்து தூங்கி உள்ளனர். இந்நிலையில் அதிகாலை 2:00 மணி அளவில் முகமூடி கொள்ளையர்கள் இரும்பு கேட்டை திறந்து கதவைத் தட்டி உள்ளனர். கதவை திறந்த ராஜேந்திரனை முகமூடி அணிந்த 4 பேர் கத்தியை காட்டி மிரட்டி உள்ளே புகுந்துள்ளனர்.

இதனை அடுத்து அவர்கள் நான்கு பேரும் சுபாவின் கழுத்தில் இருந்து இருந்த இரண்டு பவுன் தங்க சங்கிலி, கம்மல் ஆகியவற்றை பறித்ததோடு மட்டுமல்லாமல் பீரோவில் வைத்திருந்த 10 பவுன் தங்க நகைகள் மற்றும் 4000 ரூபாய் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த கொலை சம்பவம் குறித்து ராமமூர்த்தி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிந்து கைரேகை மற்றும் தடையவியல் நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்கு சென்று தடயங்களை சேகரித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களை பீதியடைய செய்துள்ளது.

Categories

Tech |