Categories
தேனி மாவட்ட செய்திகள்

வீட்டில் தனியாக இருந்த பெண்… கொத்தனார் செய்த செயல்… போலீசார் தீவிர விசாரணை…!!

பட்டப்பகலில் வீட்டிற்குள் நுழைத்து பெண்ணை கத்தியால் குத்திய கொத்தனாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தேனி மாவட்டம் கருவேல்நாயக்கன்பட்டி அருகே உள்ள மீனாட்சி நகரில் கருப்பையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தற்போது சென்னையில் பணிபுரிந்து வருவதால் அவரது மனைவி ஜோதி சொந்த ஊரில் வசித்து வந்துள்ளார். இநிலையில் கடந்த 8ஆம் தேதி போடி பகுதியில் உள்ள சுப்புராஜ் நகரை சேர்ந்த கொத்தனாரான வீரராஜ் (எ) பாண்டி ஜோதியின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது நான் உங்கள் கணவருக்கு வேண்டியவர் என்று கூறியுள்ளார்.

இதனை நம்பிய ஜோதியும் அவரை வீட்டின் முன் அறையில் உக்கார வைத்துவிட்டு சாப்பாடு எடுக்க சமையல் அறைக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து ஜோதியை பின்தொடர்ந்து சென்ற பாண்டி அவரை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதனைதொடர்ந்து ஜோதியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு சென்ற அக்கம்பக்கத்தினர் படுகாயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனையில் அனுமத்தித்துள்ளனர்.

இதுகுறித்து ஜோதி அல்லிநகரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து வீரராஜ் பாண்டியை கைது செய்துள்ளனர். மேலும் எதற்காக ஜோதியை தாக்கினார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |