வீடு புகுந்து பெண்ணை தாக்கிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேதாரண்யம் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் மஞ்சுளா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குணசெல்வி என்ற மகள் இருக்கிறார். இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. இந்நிலையில் மஞ்சுளா வேலைக்கு சென்றிருந்தபோது குணசெல்வி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அதே தெருவில் வசித்து வரும் கார்த்திகேயன் என்பவர் திடீரென வீட்டிற்குள் புகுந்து குணசெல்வியிடம் தகராறு செய்துள்ளார்.
அதன்பின் கார்த்திகேயன் குணசெல்வியை தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த குணசெல்வியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து காவல்நிலையத்தில் மஞ்சுளா அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த காவல்துறையினர் கார்த்திகேயனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.