விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி அருகே கருவாச்சிதிங்கள் கிராமத்தில் நடராஜன்- அம்சவேணி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் அம்சவேணிக்கு சர்க்கரை நோய் இருந்துள்ளது. இந்நிலையில் அம்சவேணி கடந்த 6-ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து விஷம் குடித்துவிட்டு மயங்கி நிலையில் கிடந்துள்ளார்.
இதைபார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அம்சவேணியை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அம்சவேணி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நல்லான்பிள்ளை பெற்றாள் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.