வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறி பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பாக டிஐஜியிடம் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்திலுள்ள பண்ரூட்டி பகுதியைச் சேர்ந்த சற்று மனநலம் பாதிக்கப்பட்ட 22 வயதுடைய பெண் சென்ற 30-ஆம் தேதி தனது பாட்டி வீட்டில் தனியாக இருந்த போது அதே பகுதியில் வசித்து வரும் ஞானஜோதி என்பவர் பாட்டி வீட்டிற்கு வந்து கத்தியை காட்டி மிரட்டி அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார்.
இதுபற்றி வெளியே யாரிடமாவது கூறினால் தாத்தா பாட்டியை கொன்றுவிடுவதாக மிரட்டி இருக்கிறார். இதைத்தொடர்ந்து பெண்ணின் சித்தி புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்தார்கள். ஆனால் அவர்கள் ஞானஜோதியை கைது செய்யவில்லை என்பதால் நேற்று பெண்ணின் உறவினர்கள் ஞான ஜோதியே கைது செய்ய வேண்டும் என விழுப்புரம் சரக போலீஸ் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளனர். மனுவை பெற்ற போலீஸ் அதிகாரிகள் இது பற்றி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்கள்.