மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் அருகே மணக்குடி கிராமத்தில் ஜான் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர். இவருடைய மகள் ஜெரோஷினி ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இந்நிலையில் ஜெரோஷினி பள்ளி முடிந்து வீட்டிற்குத் திரும்பியதும் அவரது தாயார் ஜெயசீலி அவரை ஆலயத்திற்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனால் ஜெரோஷினி எனக்கு மிகவும் களைப்பாக இருக்கிறது நான் ஆலயத்திற்கு வரவில்லை என கூறியுள்ளார். இதனையடுத்து ஜெயசீலி மட்டும் ஆலயத்திற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் தனியாக இருந்த ஜெரோஷினி வீட்டின் மாடியில் இருந்த ஒரு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். அதன்பிறகு ஆலயத்தில் இருந்து திரும்பி வந்த ஜெயசீலி கதவைத் தட்டியுள்ளார்.
ஆனால் நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் ஜெயசீலி ஜன்னல் வழியே வீட்டிற்குள் எட்டிப் பார்த்துள்ளார். அப்போது ஜெரோஷினி தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்து அருகில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்துள்ளார். உடனே அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து ஜெரோஷினியை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஜெரோஷினி ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதன்பிறகு ஜெரோஷனியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து ஜெயசீலி சுசீந்திரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.