Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“வீட்டில் தனியாக இருந்த முன்னாள் ராணுவ வீரரின் மனைவி”…. மதுக்காக கழுத்தை நெரித்து கொலை செய்த இரண்டு பேர்….!!!!!

வீட்டில் தனியாக இருந்த பெண்ணை படுகொலை செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை மாவட்டத்திலுள்ள அலங்காநல்லூர் அருகே இருக்கும் காந்தி கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் பாண்டி என்பவரின் மனைவி காந்திமதி. இத்தம்பதியினர்க்கு குழந்தை இல்லை. 10 வருடங்களுக்கு முன்பாக பாண்டி இறந்துவிட்டார். இந்த நிலையில் அவரின் உதவித்தொகையை வைத்து காந்திமதி வாழ்ந்து வந்த நிலையில் நேற்று அதிகாலை வீட்டில் மர்மமான முறையில் அவர் இறந்து கிடந்ததை பார்த்த உறவினர்கள் போலீசாரக்கு தகவல் கொடுத்ததையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டார்கள்.

அப்பொழுது காந்திமதியின் கழுத்தில் காயம் இருந்ததால் அவரின் கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரியவந்தது. மேலும் அவர் அணிந்திருந்த ஐந்து பவுன் தங்கச் நகையும் காதில் அணிந்திருந்த அறை பவுன் தோடும் காணாததால் நகைக்காக அவரை கொலை செய்திருக்கலாம் என விசாரணையில் தெரியவந்ததை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்த நிலையில் முத்துராஜா(20) மற்றும் 16 வயது சிறுவன் உள்ளிட்டோரை கைது செய்தனர்.

அவர்களிடம் விசாரித்ததில், மது குடிப்பதற்காக வீட்டில் தனியாக இருந்த பெண்ணை தலையணையால் முகத்தை அமுக்கி கொலை செய்ததாக கூறினார்கள். இச்சம்பவம் நடந்த 4 மணி நேரத்தில் கொலையாளிகளை கைது செய்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

Categories

Tech |